தமிழில் விஷால் நடித்த ‘தீராத விளையாட்டு பிள்ளை’ திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவரான தனுஸ்ரீ தத்தா தனது சொந்த வீட்டிலேயே துன்புறுத்தப்படுவதாகக் கூறி கதறி அழும் காணொளியானது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனுஸ்ரீ தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறித்த காணொளியில் சொந்த வீட்டிலேயே தான் துன்புறுத்தப்படுவதாகவும், தனக்கு யாராவது உதவி செய்யுமாறும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் Metoo புகார் கொடுத்ததில் இருந்து தனது சொந்த வீட்டிலேயே தான் மிகவும் துன்புறுத்தப்படுவதாகவும், அதனால் தான் மிகவும் சோர்ந்து விட்டதாகவும், மன அழுத்தம் காரணமாக தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது வீட்டில் வேலைக்கு பணியாட்களை கூட நியமிக்க முடியவில்லை என்றும், முன்பு பணிபுரிந்தவர்கள் தன் பொருட்களைத் திருடிச் சென்றதாகவும் அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த காணொளி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.















