இந்தியாவின் மேற்கு மாநிலமான ராஜஸ்தானின் ஜலாவர் நகரில் இன்று (25) பாடசாலைக் கட்டிடத்தின் கூரை இடிந்து விழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த அனர்த்தத்தில் குறைந்தது நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர், மேலும், 17 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேநேரம், பல மாணவர்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்க ஒரு பெரிய மீட்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் பொலிஸார் கூறியுள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாடசாலையின் கூரை எவ்வாறு இடிந்து விழுந்தது என்பதைக் கண்டறிய உயர் மட்ட விசாரணை நடத்தப்படும் என்று ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் உறுதியளித்துள்ளார்.
வட இந்தியா முழுவதும் பருவமழை தொடர்ந்து நீடிப்பதல், ஜலாவர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

















