தகவல் தொழில் நுட்பத்தில் புதிய புரட்சியை AI தொழில் நுட்பம் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவம், கல்வி, மென்பொருள் என பலதரப்பட்ட துறைகளில் AI ஆதிக்கம் செலுத்தி வருகிறது .
இந்நிலையில்” இனி வரும் காலங்களில் (AI) தொழில்நுட்பம் தவறான நோக்கத்துடன் பயன்படுத்தலாம்” என Chat GPT யின் தாய் நிறுவனமான ஓபன் AI நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி சாம் ஆல்ட்மன்( Sam Altman) ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” வரும் காலங்களில், வங்கிகளின் பாதுகாப்பு அம்சங்களை AI முறியடிக்கலாம். அதன் மூலம் பணம் திருடப்படலாம். அத்துடன் அடையாள திருட்டு, இணைய மோசடி, போலி செய்திகள் போன்றனவும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகின்றது.
எனவே, இத்தகைய தவறாக செயல்களை கட்டுப்படுத்த அரசு, தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார்.















