வங்காள விரிகுடாவில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (29) அதிகாலை 12.11 மணியளவில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்திய நில அதிர்வு மையத்தின்படி, நிலநடுக்கத்தின் ஆழம் 10 கி.மீ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை எந்த சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
ஜூலை 22 காலை டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
















