தனமல்வில, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தஹையகலவில் உள்ள கரமெட்டிய குளத்திற்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்தில் உயிரிழந்த நிலையில் காட்டு யானையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த காட்டு யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் பலமுறை சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால் பின்னர் அந்த யானை இறந்து விட்டது.
யானையின் உயிரிழப்புக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
மேலும் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














