பிரான்ஸில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தெருவோரத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளிக் கழிப்பறைகளுக்கு எதிராக (Outdoor Urinals – Uritrottoirs) பெண் உரிமை இயக்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இக்கழிப்பறைகள் பொதுவாக ஆண்கள் பயன்படுத்துவதற்கு இலகுவாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் அதனை பெண்கள் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுவதாகவும், இது சமூக சமத்துவத்தின் அடிப்படையை மீறும் செயல் எனவும் “பெண்களின் பாதுகாப்பும், சமத்துவ உரிமையும் இங்கு இழப்படுகின்றன எனவும் பெண் உரிமை அமைப்புகள் (Feminist ) குற்றஞ்சாட்டி வருகின்றன.
மேலும் இவ்வகை கழிப்பறைகள் நீர் இல்லாமல் இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை எனவும் பொதுமக்கள் வீதிகளில் சிறுநீர் கழிப்பதை தவிர்க்கத்தான் இவ்வாறான கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ள போதும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இதனை பயன்படுத்த முடியாத நிலமை காணப்படுவதாகவும் இதனால் அவர்களது உரிமைகள் மறுக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கழிப்றை விடயம் அந்நாட்டில் பெரும் பேசு பொருளாகியுள்ள நிலையில் பல இடங்களில் பெண் உரிமை அமைப்புக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, சில இடங்களில் போராட்டக்காரர்களால் குறித்த கழிப்பறைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
















