• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
செம்மணி விடயத்தில் சாட்சியமளிக்க சோமரட்ன  உடன்படுவார் எனில் அதற்கு அரசு உதவ வேண்டும்!

செம்மணி விடயத்தில் சாட்சியமளிக்க சோமரட்ன உடன்படுவார் எனில் அதற்கு அரசு உதவ வேண்டும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/05
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

செம்மணி மனித புதை குழி விடயம் தொடர்பாக  சர்வதேச நீதிமன்றில்  சாட்சியமளிக்க சோமரட்ன ராஜபக்ச  உடன்படுவார் எனில் அதற்கு அரசாங்கம் வழி செய்து கொடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு இடம்பெறுவதை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..

செம்மணி மனித புதைகுழி ஆய்வு நடைபெறுகின்ற இடத்திலே ஸ்கேனர் கருவி பயன் படுத்தப்படுகின்றது.  அதனைப்  பயன்படுத்துவதன் மூலமாக நிலத்திற்கு அடியிலே ஏதாவது அசாதாரணமான விடயங்கள் காணப்பட்டால் அல்லது அசைவுகள் இருந்தால் அந்த  இயந்திரம் அதனை வெளிக்கொண்டு வரும் எனக் கூறுகின்றனர். 

இதற்கமைய இன்றைய பரிசோதனையில் தரவுகள் பெறப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அந்த தரவுகளை ஆராய்ந்து அது எப்படியாக இருக்குமென்று அனுமானங்கள் செய்து அங்கு வேறு எந்த இடத்திலே மனித எலும்புக் கூடுகள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கிறது என்பதனை அறிந்து அந்தந்த இடங்களிலே அகழ்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

பொலிஸாரின் குற்றப் புலனாய்வுத் துறையின் மூலமாக பொது மக்களுக்கு ஒரு அறிவித்தலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் இங்கே கண்டெடுக்கப்பட்ட தடயப் பொருட்களை அவர்கள் வந்து பார்வையிடலாம் எனவும், அவ்வாறு பார்வையிடுகிற போது அதில் ஏதாவது தங்களுக்கு தெரிந்தது அதாவது தங்களுடைய உறவினர்கள் யாரும் வைத்திருந்ததா என அடையாளம் காண முடியுமா என்பதை தெரிவிக்க  முடியும் எனவும் அதற்கு இணங்க பொலிஸ் குற்றவிசாரணைப் பிரிவு  விசாரணையை முன்னெடுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மனித புதைகுழியில் இப்பொழுது 130 இற்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகளாக கண்டெடுக்கப்பட்ட இருக்கின்றன. இவ்வாறு ஒவ்வொருநாளும் இங்கு எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்படுகின்றன.

இதனுடைய பின்னணியை நாங்கள் பார்ப்போமாக இருந்தால் 1999 ஆம் ஆண்டு சோமரட்ன ராஜபக்ச நீதிமன்றத்தில் சொன்ன கூற்றின் பிரகாரம் 15 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் கண்டெடுக்கபட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து  தற்செயலாக கண்டெடுக்கப்பட்ட எலும்புகூட்டினால் தொடரும் அகழ்வு பணியில் நூற்று கணக்கான எலும்பு கூட்டு தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கண்டெடுக்கப்படுகின்றவை அந்த வேளையில் சோமரட்ன ராஜபக்ச சொன்ன கருத்துக்களுடன் ஒத்துப் போகிறன.

அவர் 300 தொடக்கம் 400 வரையான உடல்கள் புதைக்கப்பட்டது என்றும் அதிலே இராணுவத்தின்  மிக உயர் அதிகாரிகள் பங்காளர்களாக இருந்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார். 

அவர் நீதிமன்றத்தில் தெரிவித்த விடயத்தின்  உண்மைத்தன்மை 25 வருடங்களுக்குப் பின்னர் தற்போது  வெளிப்படுகின்றது.

நான் பல தடவைகள் முன்னரே சொல்லி இருந்ததைப் போல உண்மை கண்டறியப்படுகிற பொறிமுறைமை குறித்து நாங்கள் பேசுகிற போது இலங்கையிலே நிலத்திற்கு கீழே தான் இந்த உண்மைகள் பல புதைக்கப்பட்டு இருக்கின்றன.

ஆகவே இந்த மனித புதைகுழிகள் தோண்டப்படுகிற விடயம் உண்மை கண்டறியப்படுகிற செயன்முறையிலே மிகவும் முக்கியமான ஒரு பங்களிப்பைச் செலுத்துகிறது.

பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் இருக்கின்றன. இது மூடி மறைக்கப்படும் அல்லது அப்பொழுது செம்மணியிலே செய்துவிட்டு கைவிட்டது போல அப்படியே இதுவும் கைவிடப்படுமா அல்லது மன்னாரில் அல்லது கொக்குத்தொடுவாய் அல்லது மாத்தறையில் நடந்ததை போல இருக்குமா என்று பலவிதமான சந்தேகங்கள் கேள்விகள் பலருக்கு இருக்கின்றது.

ஆகையினால் தான் இதனை வெளிப்படைத் தன்மையோடு செய்ய வேண்டுமென்று நாங்கள் கேட்கிற அதேவேளையிலே இலங்கை அரசாங்கத்தினுடைய வெவ்வேறு அணிகள் அது பொலிஸாக இருக்கலாம் அல்லது காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகமாக இருக்கலாம், பல்கலைக் கழகமாக இருக்கலாம் அகழ்வு பணிகள் செய்பவர்களாக இருக்கலாம்,  இவர்கள் எல்லாம் இதனைச் சேர்ந்து செய்திருந்தாலும் கூட மக்களுக்கு இது சம்பந்தமாக ஒரு நம்பிக்கை ஏற்படுவதாக இருந்தால் நிச்சயமாக ஆரம்பத்தில் இருந்தே சர்வதேச மேற்பார்வை இருக்க வேண்டுமென நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டே இருக்கிறோம்.

இந்த அகழ்வு பணிகள் ஆரம்பித்த வேளையிலேயே நாங்கள் இது சம்பந்தமாக ஐனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறோம். ஐனாதிபதிக்கு தான் அந்த கடிதத்தை எழுத முடியும். ஏனென்றால் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே தான் இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஆகையினாலே வெறுமனே இப்படியான நிபுணத்துவம் இல்லாத தரப்புக்களை வைத்து இதனைச் செய்யாமல் முழுமையாக ஒரு சர்வதேச ஈடுபாட்டை இந்த வேளையிலே வருவிக்க வேண்டும் என்பது நாங்கள் தொடர்ச்சியாக சொல்லி வருகிற ஒரு விடயம். ஆகவே அதனை திரும்பவும் இப்போதும் வலியுறுத்துகிறேன்.

நேற்று முன் தினம் கூட செம்மணி தொடர்பில் சர்வதேச நீதிமன்றிலே சாட்சியமளிக்க தான் தயார் என சொன்னதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அந்தச் செய்தி உண்மையானால் அதற்கு வழி செய்து கொடுக்க வேண்டும்.

சர்வதேச மன்று ஒன்றிலே அவரை நிறுத்தி அவருடைய கூற்றுக்களைப் பெற்று அவர் சொல்லுவதில் ஒத்துப் போகிறதான இந்தத் தடயங்களை கண்டுபிடிக்கிற விடயங்களை சரி  பார்க்கப்பட வேண்டும். இது மட்டுமல்ல. இது ஒரு திருப்புமுனையான சம்பவமாக நாங்கள் கருதுகிறோம்.

வேண்டுமென்றே தமிழ் மக்கள் ஒரு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு தற்கால சான்றுகள் இங்கே இருந்து ஆரம்பமாகிறது போலவும் தோன்றுகிறது.

ஆகவே இதற்கான சான்றுகளை சேகரிக்கிற பொறிமுறைகள் விசேடமாக ஜக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிலே தற்பொழுது ஒஸ்லெப் என்ற பொறிமுறை இருக்கிறது. அதாவது சான்று பதிவு செய்வதும் பாதுகாப்பதுமான பொறிமுறை. அவை எல்லாம் வரவழைக்கப்பட்டு இங்கே நடந்த விடயங்கள் முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.

அரச அதிகாரிகள் அல்லது அரச திணைக்களங்கள் இதிலே சற்று பின்னடிக்கிறதான சந்தேகங்கள் சில சில சம்பவங்கள் மூலமாக எங்களுக்கு தெரிய வருகிறது.

ஆகவே அரசாங்கத்திற்கு நாங்கள் சொல்வது இதிலே முழுமையான வெளிப்படைத் தன்மையோடு முழுமையான சர்வதேச மேற்பார்வையோடு இவை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். ஆகையினாலே திரும்பவும் ஒரு சர்வதேச பொறிமுறை இதற்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

மேலும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்திலே நிலுவையில் இருக்கும் செம்மணி வழக்கை இங்கே இடம்மாற்ற வேண்டும். இங்கே இருந்த வழக்கை அப்பொழுது சந்தேக நபர்களாக இருந்த இராணுவத்தினர் இங்கே பாதுகாப்பு போதாதென்று கூறி அனுராதபுரத்திற்கு மாற்றி பின்னர் கொழும்பிற்கு மாற்றப்பட்டு அங்கே வழக்கு இருக்கிறது. ஆகையினாலே அந்த வழக்கை இங்கே திரும்பவும் கொண்டுவரப்பட்டு இந்த வழக்கோடு சேர்ந்து விசாரிக்கப்பட வேண்டும்” இவ்வாறு சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

Related

Tags: சுமந்திரன்செம்மணிமனித புதைகுழி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் 23 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

Next Post

பிரான்சில் அமைக்கப்பட்டுள்ள தெருவோரக் கழிப்பறைகளுக்கு எதிராக பெண் உரிமை குழுக்கள் கண்டனம்!

Related Posts

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!
இலங்கை

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

2026-05-24
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!
இலங்கை

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

2026-05-24
தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!
இலங்கை

தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

2026-05-24
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

டிக்கோயா இரட்டை கொலை; சந்தேக நபர் தங்க நகைகளுடன் கைது!

2026-05-24
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!
ஆசிரியர் தெரிவு

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!
இலங்கை

நியூஸிலாந்து, அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் அமைச்சர் விஜித்த ஹேரத்!

2026-05-24
Next Post
பிரான்சில் அமைக்கப்பட்டுள்ள  தெருவோரக்  கழிப்பறைகளுக்கு எதிராக பெண் உரிமை குழுக்கள் கண்டனம்!

பிரான்சில் அமைக்கப்பட்டுள்ள தெருவோரக் கழிப்பறைகளுக்கு எதிராக பெண் உரிமை குழுக்கள் கண்டனம்!

3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

யானை தாக்குதலுக்கு இலக்காகி தாயொருவர் உயிரிழப்பு!

யானை தாக்குதலுக்கு இலக்காகி தாயொருவர் உயிரிழப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

0
பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

0
அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

0
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

0
தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

0
ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

2026-05-24
பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

2026-05-24
அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

2026-05-24
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

2026-05-24
தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

2026-05-24

Recent News

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

2026-05-24
பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

2026-05-24
அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

2026-05-24
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

2026-05-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.