போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் புதிய செயலாளராக பொறியாளர் (கலாநிதி) அசிரி கருணவர்தன ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதம் இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவினால் வழங்கப்பட்டது.
இந்த நியமனத்திற்கு முன்னர், அசிரி கருணவர்தன தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றியிருந்தார்.












