வத்தளை, பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹேகித்த பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹேகித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்த நபர் மீது கடந்த ஜூலை 19 அன்று முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் தாக்கியுள்ளனர்.
இதனால், பாதிக்கப்பட்டவர் உயிரிழந்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸாரும், களனி பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
2025.08.04 அன்று இந்தக் குற்றத்தைச் செய்ய வந்த ஒரு சந்தேக நபர் களனி பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையினரால் குற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட 4 வாள்களுடன் கைது செய்யப்பட்டு வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
2025.08.05 அன்று மோதரை பகுதியில் இரண்டு சந்தேக நபர்களும், கொலைக்கு உதவியதற்காக இரண்டு மொபைல் போன்களுடன் மேலும் ஒரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு 15 மற்றும் வத்தளை பகுதிகளில் வசிக்கும் 17, 25 மற்றும் 27 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 2025.08.06 இன்று நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் களனி பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையும், வத்தளை பொலிஸாரம் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, கல்கிஸ்ஸ பகுதியில் நடந்த கொலை தொடர்பாக மற்றுமோர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2025.08.01 அன்று கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு பேரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி, ஒருவரைக் கொன்று, பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றங்களுக்காக கல்கிஸ்ஸ பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
2025.08.05 அன்று மொரட்டுவ பகுதியில் உள்ள கல்கிஸ்ஸ பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், கொலையில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுடதுடன், அவரிடமிருந்து கூரிய ஆயுதங்கள் மற்றும் மொபைல் போன் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்மலானை பகுதியில் வசிக்கும் 28 வயதுடையவர்.
சந்தேக நபரை இன்று கல்கிஸை நீதிவான் நீதிமன்றில் முன்னலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.














