பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த அனர்த்தத்தில் தந்தையும் மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (11) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வென்னப்புவவையைச் சேர்ந்த ஒரு குழுவினர் பொலன்னறுவையில் உள்ள ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.
இந்த பயணத்தின் போது அவர்கள் படகு சவாரி மேற்கொண்டுள்ளபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில் ஒன்பது பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் மற்றும் அவரது 38 வயதுடைய மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களின் சடலங்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பிரேத பரிசோதனைகள் இன்று (12) நடத்தப்பட உள்ளன.
சம்பவம் குறித்து பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

















