இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் கடற்படைகளுக்கு இடையில், நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் ‘INS Rana’ என்ற இந்தியக் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்திய கடற்படைக் கப்பலான ‘INS Rana’ நேற்று காலை திருகோணமலை துறைமுகத்தை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் கப்பலை வரவேற்றிருந்தனர்.

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளில்
குறித்த குழுவினர்கள் பங்கேற்க்கவுள்ளதுடன் நாட்டிலுள்ள பல இடங்களைப் பார்வையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை இராணுவத்தினருக்கான ஒரு யோகா நிகழ்ச்சியை நடத்துவதற்கும், திருகோணமலையில் உள்ள சிறப்பு படகுப் படை தலைமையகத்திலும் கப்பலிலும் பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘INS Rana’ கப்பல் தனது உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, நாளை மறுதினம் 14ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்படும் என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.















