பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பாக நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 25,573 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் குற்றவியல் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 616 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 13 பேர் நேரடியாக பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும், 265 பேருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் 161 பேருக்கு எதிராக செயற்பாட்டிலுள்ள கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 72 பேரையும், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக 18 பேரையும் கைது செய்துள்ளதுடன் போக்குவரத்து விதிமீறல்களுக்காக 3567 பேர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.














