2025 ஆசியக் கிண்ணத்துக்கான அணியில் இருந்து பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர்களான பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் நீக்கப்பட்டுள்ளனர்.
17 பேர் கொண்ட அணிக்கு சல்மான் ஆகா தலைமை தாங்குகிறார்.
பாபரோ அல்லது ரிஸ்வானோ பாகிஸ்தானின் அண்மைய டி20 அணிகளிலும், பங்களாதேஷுற்கு எதிரான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு போட்டிகளிலும், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலும் இடம்பெறவில்லை.
இந்த நிலையில், அடுத்த மாதம் ஆரம்பமாகும் பல அணிகள் பங்கேற்கும் ஆசியக் கிண்ணப் போட்டியிலும் அவர்கள் பங்கேற்கவில்லை,
இது அடுத்த ஆண்டு டி20 உலகக் கிண்ணத்துக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது.
அண்மைய பாகிஸ்தான் சூப்பர் லீக் சீசனில், பெஷாவர் சல்மிக்காக பாபர் 128.57 ஸ்ட்ரைக் ரேட்டில் 288 ஓட்டங்களை எடுத்தார்.
அதே நேரத்தில் ரிஸ்வான் 139.54 ஸ்ட்ரைக் ரேட்டில் 367 ஓட்டங்களை எடுத்தார்.
இருவரும் இறுதியாக 2024 டிசம்பரில் பாகிஸ்தான் அணிக்காக ஒரு டி20 போட்டியில் விளையாடினர்.















