ரஷ்யாவின் ரியாசான் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் கடந்த வாரம் ஏற்பட்ட வெடிவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 20 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், இந்த அனர்த்தத்தில் 134 பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்யாவின் அவசர சேவைகள் திங்களன்று (18) தெரிவித்தன.
கடந்த வெள்ளிக்கிழமை தொழிற்சாலையில் உள்ள ஒரு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக மொஸ்கோவின் தென்கிழக்கே அமைந்துள்ள ரியாசான் பிராந்தியத்தின் ஆளுநர் பாவெல் மல்கோவ் குறிப்பிட்டுள்ளார்.
தீ விபத்துக்கான காரணம் என்ன அல்லது தொழிற்சாலை என்ன உற்பத்தி செய்கிறது என்பது ரஷ்ய ஊடக அறிக்கைகளிலிருந்து தெளிவாகத் தெரியவில்லை.
காயமடைந்தவர்கள் ரியாசான் மற்றும் மொஸ்கோவில் அமைந்துள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

















