பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் இன்று (19) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வருகைதந்த அடையாளந்தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பேலியகொடை மீன் சந்தை வர்த்தகர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதுடன் குறித்த நபர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.















