பேலியகொடையில் இன்று (19) காலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் இன்று (19) காலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த மீன் வியாபாரி ஒருவர் மீதே அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காயமடைந்த அவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

















