வானியல் ஆர்வலர்களுக்கு மறக்கமுடியாத மாதமாக 2025 செப்டெம்பர் மாதம் மாறவுள்ளது.
செப்டெம்பர் 07 ஆம் திகதி முழு சந்திர கிரணம் நிலவினை சிவப்பு நிறமாக தோன்றச் செய்தது.
இந்தக் காட்சியை உலகம் முழுவதும் உள்ள பெரும்பான்மையிலான மக்கள் கண்டு ரசித்தனர்.
இந்தக் காட்சி தோன்றி இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தற்சமயம் சூரியக் கிரகணம் தோன்றவுள்ளது.
இரண்டு கிரகணங்களுக்கு இடையில் வெறும் 15 நாட்கள் இடைவெளி மட்டுமே இருப்பதால் இந்த வானியல் நிகழ்வுகளில் ஆர்வம் மேலும் அதிகரிக்கிறது.
ஜோதிடக் கண்ணோட்டத்தில் இது மிகவும் அரிதான நிகழ்வு.
அதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி ஆண்டின் இரண்டாவதும் இறுதியுமான சூரியக் கிரகணம் நிகழும்.
இந்த நாளில் பூமியின் சில பகுதிகளில் மாத்திரமே பகுதிநேர சூரிய கிரகணம் தென்படும்.
TimeandDate.com தகவலின்படி, உலகின் மொத்த மக்கள்தொகையில் 0.20 பேர் மட்டுமே கிரகணத்தை பார்வையிடலாம்.
நியூசிலாந்து, அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை, சில பசிபிக் தீவுகள் மற்றும் அண்டார்டிகாவின் ஒரு பகுதியிலிருந்து மட்டுமே தெரியும்.
இந்த இடங்களில், சூரிய உதயத்தின் போது கிரகணம் தெரியும்.
அதே நேரத்தில், டுனெடின் போன்ற இடங்களில் சூரியனின் 72% வரை மறைக்கப்படும்.
அண்டார்டிகா அதன் சிறந்த காட்சியை பெறும்.
செப்டம்பர் 21 ஆம் திகதி, கிரகணம் இலங்கை நேரப்படி சுமார் இரவு 11 மணிக்கு தொடங்கி அதிகாலை 03.23 மணிக்கு முடிவடையும்.
இது சுமார் 4 மணி நேரம் நீடிக்கும்.
இந்த சூரிய கிரகணம் இலங்கையல் இரவில் நிகழும் என்பதால் நமக்குத் தெரியாது.
இலங்கை மற்றும் வடக்கு அரைக்கோளத்தின் பெரும்பகுதி மக்களால் இந்த பகுதி சூரிய கிரகணத்தைக் காண முடியாது.
தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், நேபாளம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கையில், இந்த கிரகணத்தின் எந்த பகுதியும் தெரியாது.
கிரகணத்தின் போது கூட, சூரியனை வெறும் கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் பிரகாசமாக இருக்கும்.
எனவே, இதற்கென வடிவமைக்கப்பட்ட சூரிய கிரகண கண்ணாடிகள் அல்லது சான்றளிக்கப்பட்ட வடிகட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அவை இல்லாமல் சூரியனைப் பார்ப்பது நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம் என்றால் என்ன?
சூரிய கிரகணம் என்பது, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது, நிலவின் நிழல் பூமியின் மீது பட்டு சூரியனின் ஒளி மறைக்கப்படும் வானியல் நிகழ்வாகும். இது பூமியின் மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும்போது மட்டுமே நிகழும். நிலவின் மறைப்பு சூரியனை முழுமையாக மறைக்கும் போது முழு சூரிய கிரகணமும், பகுதியளவு மறைக்கும்போது பகுதி கிரகணமும் ஏற்படும்.
















