பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்கும் கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதரகம இன்று விடுமுறையில் உள்ளதால், வழக்கு அடுத்த திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அந்த திகதி வரை ராஜபக்ஷ விளக்கமறியலில் இருப்பார்.
மேலும் அவரது பிணை மனு தொடர்பான முடிவு செப்டம்பர் 22 அன்று அறிவிக்கப்படும்.















