நடப்பாண்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 1,960 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இக் காலகட்டத்தில், 1,843 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளன. இதுதவிர, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 3,708 பாரதூரமான விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.













