புயல் அச்சம் காரணமாக ஹொங்கொங் சர்வதேச விமான நிலையம் இந்த வாரம் அனைத்து பயணிகள் விமானங்களையும் 36 மணி நேரம் நிறுத்தி வைக்கத் தயாராகி வருவதாக இந்த விடயத்தை நன்கு அறிந்த வட்டாரங்கள் மேற்கோள் காட்டி News.Az செய்தி வெளியிட்டுள்ளது.
சக்திவாய்ந்த புயல் நெருங்கி வருவதால், உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைப்பது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக, பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பான முறையான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த நேரங்களில் விமான நிலையம் மூடப்படும் என்று குவாண்டாஸ் ஏர்வேஸ் லிமிடெட் ஏற்கனவே தனது வலைத்தளத்தில் பயணிகளுக்கு அறிவித்துள்ளது.
கருத்துக்கான கோரிக்கைகளுக்கு ஹாங்காங் விமான நிலைய ஆணையமோ அல்லது சிவில் விமானப் போக்குவரத்துத் துறையோ உடனடியாக பதிலளிக்கவில்லை.
36 மணிநேர நிறுத்தம் முந்தைய வானிலை தொடர்பான பணிநிறுத்தங்களை விட கணிசமாக நீண்டதாக இருக்கும்.

2023 செப்டம்பரில் ஹொங்கொங்கில் பதிவான வலுவான புயல்களில் ஒன்றான சாவோலா சூறாவளியால் 20 மணிநேர விமானங்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதே நேரத்தில் ஜூலை மாதம் ஏற்பட்ட விபா சூறாவளி 13 மணிநேரம் விமானப் போக்குவரத்துகளை பாதித்தது.
இந்த நிலையில் “ரகசா” என்ற புயல் ஏற்கனவே தீவிரமடைந்துள்ளது.
அதன் மையப்பகுதிக்கு அருகில் மணிக்கு 230 கிலோமீட்டர் (143 மைல்) வேகத்தில் காற்று வீசுகிறது.
இது நான்காம் வகை சூறாவளிக்கு சமம் என்று கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
சராசரியாக, ஹெங்கொங் சர்வதேச விமான நிலையம் தினமும் 1,100 விமானங்களையும் 190,000 பயணிகளையும் கையாளுகிறது.















