கொழும்பு, ஓல்காட் மாவத்தை – ரயில்வே தலைமையகத்திற்கு அருகில் இன்று (26) காலை ஒரு தனியார் பயணிகள் பேருந்து மீது மரம் வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
எனினும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முறிந்து வீழ்ந்த மரத்தை வீதியிலிருந்து அப்புறப்படுத்தி, போக்குவரத்து நடவடிக்கையை வழமைக்கு கொண்டு வரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.















