2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக எதிர்காலத்தில் ஒன்று அல்லது இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிப்பதில் தொடர்ச்சியான விசாரணைகள் கவனம் செலுத்துவதாகவும் ஜனாதிபதி மேலும் கூறினார்.
தாக்குதல்கள் தொடர்பில் புதிய விசாரணைகளை நடத்த வேண்டியிருக்கலாம்.
சாட்சியங்கள் அழிக்கப்பட்டு மறைக்கப்படுவதும், விசாரணை தவறாக வழிநடத்தப்படுவதும் நடந்த பிற சம்பவங்களில் அடங்கும்.
அமெரிக்காவிற்கு தனது விஜயத்தின் போது நடைபெற்ற அங்கு வசிக்கும் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பின் போது இந்த அறிவிப்பினை ஜனாதிபதி வெளியிட்டார்
















