மஹியங்கனை, கிரதுருகோட்டை பகுதியில் யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
மஹியங்கனை, கிரதுருகோட்டை பிரதான வீதியிலுள்ள சொரபொர 1 கனுவா பகுதியில் யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று (26) இரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த வேனில் பயணித்த 11 பேர் காயமடைந்த நிலையில் 5 பேர் மஹியங்கனை வைத்தியசாலையிலும் 6 பேர் பதுளை வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வேன் பதுளையிலிருந்து அநுராதபுரம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, விபத்து தொடர்பான விசரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














