குருணாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த ஏழு பிக்குகளின் பூதவுடல்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (27) இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கடந்த புதன்கிழமை நா உயன ஆரண்ய சேனாசனத்தின் மடங்களுக்கு இடையே பயணித்த கேபிள் கார் உடைந்து வீழ்ந்த விபத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏழு பிக்குகள் உயிரிழந்தனர்.
இதில் ரஷ்யா, ருமேனியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மூன்று வெளிநாட்டு பிக்குகளும் உள்ளடங்குவதுடன் மேலும், சில பிக்குகள் காயங்களுடன் குருணாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத்துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பிக்குகளின் பூதவுடல்கள் மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (27) இப்பூதவுடல்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.















