மின்னேரியா தேசிய பூங்காவில் சுற்றித் திரிந்த ஒரு யூனிகார்ன் எனும் செல்ல பெயரிடப்பட்ட யானையை வேண்டுமென்றே சுட்டுக் கொல்லப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியை அரசு பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கவும், தொடர்புப்பட்ட பகுப்பாய்வாளரின் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் ஹிங்குராக்கொட நீதவான் நீதிமன்றம் வனவிலங்குத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
மின்னேரியா வனவிலங்கு அலுவலக தள உதவியாளர் ஏ.பி.சி. குலரத்னவுக்கு ஹிங்குராக்கொட நீதவான் என்.டி. கருணாரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, யூனிகார்ன் யானையை சுட்டுக் கொன்றது தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த குற்றம் தொடர்பாக பொலன்னறுவை, இஹனாலுவெவ, தியபெதும பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் மாத்தளை யடிவிமான பகுதியைச் சேர்ந்த ஒருவரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
மின்னேரியா தேசிய பூங்காவிற்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது இந்த யூனிகார்ன் யானையைப் பார்வையிடுவதற்காகவே என்பதுடன் இந்த யூனிகார்ன் யானையின் உரிமைகள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதேவேளை, சுட்டுக் கொல்லப்பட்ட யூனிகார்ன் யானை 40 வயதுடையதுடன் 10 அடி 6 அங்குல உயரம் கொண்டது என்றும் கூறப்படுகிறது.














