இந்த ஆண்டு இதுவரை வடக்கு, கிழக்கில் 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பொதுமக்களிடம் திருப்பித் தரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
2025 ஜனவரி 01 ஆம் திகதி முதல் இன்றுவரை வடக்கில் மொத்தம் 672.24 ஏக்கர் நிலம் பொதுமக்களிடம் திருப்பித் தரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த நிலங்களில் 86.24 ஏக்கர் தனியார் நிலங்களும், இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட 586 ஏக்கர் நிலங்களும் அடங்கும்.
குறித்த காணிகள் தொடர்பான தகவல்கள், பாதுகாப்புச் சபை மற்றும் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு இந்த விடுவிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது பாதுகாப்பு பிரதி அமைச்சர் இந்த விவரத்தை தெரிவித்தார்.














