வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடைபெற்றது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடாத்தினார்கள்.
இதில் சின்னர் 3-6 என முதல் செட்டை இழந்தார். அலெக்ஸாண்டர் ஸ்வரெவ் முதல் செட்டை கைப்பற்றியதுடன் தொடர்ச்சியாக இரண்டாவது செட்டையும் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கினார்.
இருந்தும் சுதாரித்துக் கொண்ட சின்னர் அடுத்த இரு செட்களை 6-3, 7-5 என வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இது வியன்னா ஓபன் தொடரில் ஜானிக் சின்னரின் 2வது பட்டமாகும்.



















