அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது விலா எலும்பில் ஏற்பட்ட காயத்தால் உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதையடுத்து ஷ்ரேயஸ் ஐயர் சிட்னி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டார்.
சிட்டினியில் சனிக்கிழமை (25) நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி வீரர் அலெக்ஸ் கேரியை ஆட்டமிழக்கச் செய்வதற்காக பின்னோக்கி வேகமாக ஓடி பிடியெடுப்பினை மேற்கொண்ட போது ஷ்ரேயஸ் ஐயர் காயங்களுக்கு உள்ளானார்.
பின்னர், டிரஸ்ஸிங் அறைக்குத் திரும்பிய சிறிது நேரத்திலேயே கடுமையான அசௌகரியம் காரணமாக அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிலையில், விலா எலும்புக் கூண்டில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதால், ஐயர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



















