கடந்த ஆண்டு பொது தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கெமி படேனோக்(Kemi Badenoch) இன் முதல் ஆண்டு நிறைவை முன்னிட்டு தனது கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளார்.
இவர் தமது கட்சியில் ஒரு புதிய தளத்தை உருவாக்கினாலும், காட்சிக்காக பல விடயங்களை செய்தலும் பிற பாராளுமன்ற உறுப்பினர்களால் இதுவரை அவர் விமர்சிக்கப்பட்டார்.
இந்நிலையிலேயே அவர் தனது காட்சிப்பணியின் ஒரு ஆண்டு நிறைவை முன்னிட்டு கன்செர்வேட்டிவ் கட்சியை ‘மீண்டும் கட்டியெழுப்புவதாக’ கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த 12 மாதங்களாக நாட்டின் வலுவான பொருளாதாரம் மற்றும் வலுவான எல்லைகளுக்கான திட்டத்தை வழங்குவதிலேயே செலவிட்டதாகவும் படேனோக் கூறினார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 2 ஆம் திகதி ராபர்ட் ஜென்ரிக்கை(Robert Jenrick,) தோற்கடித்து கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட படேனோக் இன்று (02) “எங்கள் கட்சி, எங்கள் கொள்கைகளை கொண்டு பிரிட்டனுக்கான எங்கள் திட்டத்தை மீண்டும் கட்டியெழுப்புவதாக” உறுதியளித்துள்ளார்.
கடந்த 2024 பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து ரிஷி சுனக்(Rishi Sunak) ராஜினாமா செய்தமையினால் போட்டிக்குப் பின்னர் படேனோக் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.



















