கடந்த 28 ஆம் திகதி மெலிசா புயல் ஜமைக்கா தீவின் கரையைக் கடந்தபோது அங்கு சுமார் 8,000 பிரித்தானிய பிரஜைகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மெலிசா புயலை தொடர்ந்து ஜமைக்காவிலிருந்து பிரித்தானிய மக்களை அழைத்து வருவதற்கான முதல் விமானம்( charter flight ) நேற்று இரவு (01) அங்கிருந்து புறப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை மெலிசாபுயல் 5வது வகை சூறாவளியாக மணிக்கு 185 மைல் வேகத்தில் காற்று வீசிய போது ஜமைக்கா தீவில் சுமார் 8,000 பிரித்தானிய நாட்டவர்கள் இருந்ததாகக் கருதப்படுகிறது.
ஜமைக்காவைத் தாக்கியதில் இதுவரை இல்லாத அளவுக்கு வலிமையான சூறாவளிகளில் இதுவும் ஒன்றாகும்.
அந்த புயலினால் அங்கு மான்டெகோ விரிகுடா (Montego Bay ) போன்ற பிரபலமான சுற்றுலாப் பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டன இந்த சந்தர்ப்பத்திலேயே அங்கு சுற்றுலா சென்ற பிரித்தானியர்களும் இருந்துள்ளனர்.
இந்த மெலிசா புயலினால் ஜமைக்காவில் குறைந்தது 28 இறப்புகளுக்கும் அருகிலுள்ள (Haiti) ஹைட்டியில் 31 இறப்புகளுக்கும் பதிவாகியுள்ளன.
புயலினால் பாதிக்கப்பட்ட மேலும் பல பகுதிகளை அடைவது கடினமாக உள்ளமையினால் அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்க கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஜமைக்காவில் இருக்கும் பிரித்தானிய நாட்டவர்களை வணிக விமானங்களைப் பயன்படுத்தியேனும் வெளியேறுமாறு வெளியுறவு அலுவலகம் அறிவுறுத்தியுள்ளதுடன்
முடியாதவர்களுக்காக ஒரு சிறிய எண்ணிக்கையிலான விமானங்களை வாடகைக்கு வழங்கி நாட்டிற்கு அழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, பிரித்தானிய பிரஜைகளை தாங்கிய முதலாவது விமானம் நேற்றையதினம் ஜமைக்காவின் தலைநகரில் அமைந்துள்ள கிங்ஸ்டனின் நார்மன் மேன்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது.














