மத்திய அதிவேக வீதி திட்டத்தின் கீழ் புதிய பாலம் 2025.11.01 ஆந் திகதி முதல் 2025.01.31 ஆந் திகதி வரை 03 மாத காலப்பகுதியில், இரண்டு கட்டங்களாக கடவத்தை பண்டாரவத்தை பிரதேசத்தில் கொழும்பு கண்டி பிரதான வீதியினூடாக நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, முதலாவது கட்டமாக இருவழிப் பாதையான கொழும்பிலிருந்து கண்டிநோக்கிய வீதியில் ஒரு வழிப் பாதையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டத்தின் கீழ் கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பாலம் நிர்மாணிக்கப்படும் போது, அக் காலப்பகுதிகளில் இருவழிப் பாதைகளில் ஒருவழிப் பாதை தற்காலிகமாக மூடப்படும்.
இவ்வாறு முழுமையாக நிர்மாணிக்கப்படும் காலப்பகுதியில் மூடப்படும் திசைகளில் வாகன நெரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால், கொழும்பு கண்டி வீதியை பயன்படுத்தும் ஓட்டுநர்கள் முடிந்தவரை கடவத்தை வெளிப்ப்புற சுற்றுவட்டப் பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக வாகன ஓட்டுநர்கள் வேகக்கட்டுப்பாடு மற்றும் வீதி அடையாளங்களைப் பின்பற்றி பயணிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.















