பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கியுள்ள கல்மேகி என்ற சூறாவளி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு இராணுவ வீரர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்துள்ளதுடன் பல வாகனங்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
பிலிப்பைன்ஸ் நாட்டின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் தொலைத்தொடர்பு சேவைகளும் செயலிழந்துள்ளன.
சூறாவளி காரணமாக 180க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
வெள்ள மீட்புப் பணிக்காக சென்ற வானூர்தி ஒன்று மோசமான வானிலையால் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த வானூர்தியிர் சென்ற ஆறு இராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த அனர்த்தத்தில் சிக்கி 13 பேர் காணாமல் போயுள்ளதாக பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சூறாவளி நாளை இரவு(06) வியட்நாமின் மத்தியப் பகுதிகளில் கரையைக் கடக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கல்மேகி சூறாவளி மணிக்கு 120 கிமீற்றர் தொடக்கம் 165 கிமீற்றர் வேகத்திலும் வீசிய வருவதுடன் இந்த ஆண்டில் மட்டும் பிலிப்பைன்ஸைத் தாக்கும் 20வது புயலாக கல்மேகி உருவாகியுள்ளது.
இதனையடுத்து வியட்நாம் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமான முன்னெடுத்துள்ளது.
மீட்புப் பணியாளர்கள் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காதகா வானம் தெளிவாகும் வரை காத்திருப்பதாக சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் துணை நிர்வாகி ரஃபேலிட்டோ அலெஜான்ட்ரோ தெரிவித்துள்ளார்.














