நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளை குறிவைக்கும் போராட்டக்காரர்களுக்கு சிறைத்தண்டனை
உள்துறை அலுவலகத் திட்டங்களின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் போராட்டக்காரர்களுக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
தற்போது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வரும் தொழிலாளர் கட்சியின் குற்றம் மற்றும் காவல் மசோதாவில் திருத்தங்கள் மூலம் இந்த நடவடிக்கைகள் இயற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல் நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி , அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் சுமார் 96 சதவீதம் பேர் குறைந்தது ஒரு முறையாவது துன்புறுத்தல் அல்லது மிரட்டலை அனுபவித்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் பிரித்தானிய அரசியலில் பங்கேற்பவர்களைப் பாதுகாக்கவும் முன்மொழியப்பட்ட புதிய சட்டம் “தீவிரமானது ஆனால் அவசியமானது” என்று பாதுகாப்பு அமைச்சர் டான் ஜார்விஸ் கூறியுள்ளார்.
“பிரித்தானிய அரசியலில் பங்கேற்பவர்கள் எதிர்கொள்ளும் துஷ்பிரயோகத்தின் அளவு உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது. இது நமது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பிரதமர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, வடக்கு லண்டன் வீட்டிற்கு வெளியே யூத் டிமாண்ட் நடத்திய காசா போராட்டங்கள் குறித்து அவர் கோபமாக இருந்ததாக அறியப்படுகிறது.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் குடும்ப வீடுகளுக்கு வெளியே நடந்த போராட்டங்களின் போது பொலிஸார் மிகவும் மெத்தனமான அணுகுமுறையை எடுத்ததாக முறைப்பாடு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
















