கடந்த 2011ஆம் ஆண்டு எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேருக்கு மரணதண்டனை வழங்கி எம்பிலிப்பிட்டிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எம்பிலிப்பிட்டிய முல்லகசியாய பகுதியில் 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரமான கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 10 பேருக்கு எம்பிலிப்பிட்டிய உயர் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது


















