நிதி ஆணைக்குழுவின் விதந்துரைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தலுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்திற்கமைய நிறுவப்பபட்டுள்ள மாகாண சபைகளுக்குத் தேவையான வளங்கள் தொடர்பாகவும், மாகாண சபைகளுக்கு தேசிய வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்படுகின்ற நிதியங்களை ஒவ்வொரு மாகாண சபைக்கும் ஒதுக்கி வழங்குவதில் கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாடுகள் பற்றி விதந்துரைப்பதற்கு அரசியலமைப்பின் 154 ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய நிதி ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைகளுக்காக ஒதுக்கப்படுகின்ற மூலதன நிதியங்கள் மாகாண சபைகளுக்கு ஒதுக்கி வழங்கப்பட வேண்டிய விதம் பற்றியும் மற்றும் மீண்டெழும் செலவு இணக்கம் பற்றி நிதி ஆணைக்குழுவின் விதப்புரைகளை ஜனாதிபதி சமர்ப்பித்துள்ளார்
குறித்த விதப்புரைகளை அமுல்படுத்தவும், அரசியலமைப்பின் 154(z)(7) உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய குறித்த விதந்துரைகளை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.















