உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிகாரிகள் அபுதாபியில் ரஷ்ய பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், ரஷ்யாவும் உக்ரேனும் திங்கட்கிழமை (24) இரவு முழுவதும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
கியேவ் நகரத்தின் மீதான ரஷ்ய தாக்குதல்களில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் ரோஸ்டோவ் பகுதியில் உக்ரேன் நடத்திய தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சர்ச்சைக்குரிய 28 அம்ச அமெரிக்க அமைதித் திட்டத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்களை உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வரவேற்றதைத் தொடர்ந்து அண்மைய தாக்குதல்கள் வந்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க மற்றும் உக்ரேன் அதிகாரிகள் ஜெனீவாவில் சந்தித்து வரைவுத் திட்டத்தைப் பற்றி விவாதித்தனர்,
இது கியேவ் மற்றும் ஐரோப்பாவின் தலைவர்களால் ரஷ்யாவிற்கு மிகவும் சாதகமானது என்று விமர்சிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.














