கல்முனை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மருதமுனை 03, மெளலான பகுதியில் ஒரு வீடடில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ரி-56 ரக துப்பாக்கிகள், இரண்டு மெகசின்கள் மற்றும் எட்டு வெளிநாட்டு கடவுச்சீட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஜனாதிபதி மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகத்திற்கு எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தகவலுக்கு இணங்க, கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அதிகாரிகள் குழுவுடன் சம்பவ இடத்திற்குச் சென்று ஆயுதம் மற்றும் தொடர்புடைய பொருட்களை அதிகாரிகள் மீட்டனர்.
மீட்கப்பட்ட எட்டு கடவுச்சீட்டுகளும் ஐந்து நபர்களுக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸாரும், அதிகாரிகளும் மேற்கொண்டுள்ளனர்.















