வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் உள்ள கவரம்மான பகுதியில் வீதியில் சரிந்த மண் மேட்டை அகற்றச் சென்ற வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் குழுவொன்று அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
அவர்கள் மண் மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது, அதற்கு மேலே இருந்த மண்மேடு மரம் ஒன்றுடன் சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அவ்விடத்தில் இருந்த லொறி ஒன்றின் சாரதி தற்போது காணாமல் போயுள்ளதுடன்
மண் மேட்டில் சிக்கியிருந்த ஒரு ஊழியர் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.















