களனி ஆற்றுப் படுகையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், ஹங்வெல்ல மற்றும் அதைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் தற்போது அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஹன்வெல்ல அளவீட்டு நிலையத்தின் நீர்மட்டம் 9.78 மீட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு பெரிய வெள்ள நிலைமைக்கு அருகில் உள்ளது என்று நீர்ப்பாசணத் திணைக்களம் அறிவித்துள்ளது.
களனி ஆற்றுப் படுகையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் நீர் மேலாண்மைப் பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார்.
அதன்படி, நாகலகம் வீதியில் நீர்மட்ட அளவீடு 8.35 அடியாகும்.

இது அண்மைய வரலாற்றில் பதிவான மிக உயர்ந்த நீர்மட்டமாகும்.
எனினும், நீர் மட்டத்தில் மேலும் அதிகரிப்பு இருக்காது என்றும் அவர் கூறினார்.
களனி விஹாரைக்கு அருகில் அமைந்துள்ள வெள்ள அணை தற்போது திட்டமிடப்பட்ட அதிகபட்ச நீர் மட்டத்தை எட்டியுள்ளது.
வெள்ள அணைக்கு அருகில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் வெளியிடப்படும் எச்சரிக்கைகள் குறித்து அவதானமாக இருக்கவும்.
மேலும் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.












