வெம்ப்ளி மைதானம் அருகே 22 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் இருவரைக் கைது செய்துள்ளனர்.
வடமேற்கு லண்டனின் வெம்பிளியில் நேற்று மதியம் நடந்த பயங்கர தாக்குதலுக்குப் பின்னர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணை தீவிரப்படுத்தியிருந்தனர்.
பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு, சம்பவ இடத்திலேயே துணை மருத்துவர்களால் சிகிச்சை வழங்கப்பட்டது.
எனினும், துரதிர்ஷ்டவசமாக பாதிக்கப்பட்டவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ பொலிஸார் நேற்று இரவு உறுதிப்படுத்தியது .
கொலைச் சந்தேகத்தின் பேரில் 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்டதுடன், குற்றவாளிக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் 21 வயது பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பிளாக்பூல் பகுதியில் உள்ள துரித உணவு கடையொன்றில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக லங்காஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதன் போது கத்திக் குத்துக்கு இலக்கான ஒருவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை முன்னெடுக்கப்பட்டதாகவும், விசாரணைகளின் அடிப்படையில் சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் 38 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சந்தேகநபர் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.













