கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் குருணாகல் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நீட்டித்துள்ளது.
நான்கு மாவட்டங்களில் உள்ள 40 மாவட்ட செயலகப் பிரிவுகளுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை அமுலில் உள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவலின்படி, டிசம்பர் 06 – 09 வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது பெரும்பாலும் தென் மாகாணத்தை பாதிக்கும் என்று NBRO இன் மூத்த விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், டிசம்பர் 09-13 வரை மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் இது மத்திய மாகாணத்தை, பெரும்பாலும் மாத்தளை, பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களை பாதிக்கும் என்றும் கூறினார்.
அதன் பின்னர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், டிசம்பர் 16-19 திகதிகளில் மீண்டும் மழை பெய்யும் என்றும், இது மத்திய மாகாணத்தை மீண்டும் பாதிக்கும் என்றும் அவர் கூறினார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், அதனால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.












