இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோவின் செயல்பாடுகள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாததால், இன்று (08) பல்வேறு விமான நிலையங்களில் சுமார் 300 இண்டிகோ விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
இந்தியா இதுவரை கண்டிராத அளவிலான விமானப் பயண நெருக்கடியில் தொடர்ந்து ஏழாவது நாளாக இடையூறுகள் தொடர்கின்றன.
டெல்லி விமான நிலையத்தில், இன்று 134 இண்டிகோ விமானங்கள் – 75 புறப்பாடுகள் மற்றும் 59 வருகைகள் – இரத்து செய்யப்பட்டன.
பெங்களூரு விமான நிலையத்தில் 127 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
அகமதாபாத்தில், 20 விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
விசாகப்பட்டினத்தில் ஏழு விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.
மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பிற முக்கிய விமான நிலையங்களும் குறிப்பிடத்தக்க இடையூறுகளை சந்தித்தன.
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமாம் ஞாயிற்றுக்கிழமை 650க்கும் மேற்பட்ட விமானங்களை இரத்து செய்தது.
இரண்டு நாட்களுக்கு முன்பு 1,000க்கும் மேற்பட்ட விமானங்களை இரத்து செய்தது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு 610 கோடி இந்திய ரூபாவுக்கும் அதிகமான டிக்கெட்டுகள் திரும்பக் கொடுத்துள்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானி ஓய்வு குறித்த அரசாங்க விதிமுறைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, விமானி அறை பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்த நெருக்கடி ஏற்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை அதிகரிக்கும் விமானக் கட்டணங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் இண்டிகோவின் டிக்கெட் பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்துதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு இதுவரை எடுத்துள்ளது.
இந்த நெருக்கடி குறித்து உயர்மட்ட விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
பல்வேறு காரணிகளால் ஏற்பட்டதாகக் கூறும் குழப்பத்திற்கான மூல காரணத்தை விமான நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.













