அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடை பண்ணையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மனித பாவனைக்கு தகுதியற்ற சுமார் 12,000 கிலோ கிராம் இறைச்சியை கண்டறியப்பட்ட நிலையில் அதற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைக்குள் வெள்ள நீர் புகுந்ததாலும், குளிர்பதன வசதி பாதிக்கப்பட்டதாலும், மின் தடை ஏற்பட்டதாலும் இறைச்சி இருப்பு மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கீழ் இயங்கும் பேரிடர் மேலாண்மை துரித எண்ணிக்கு (1926) இது தொடர்பாக அளிக்கப்பட்ட முறைப்பாடுக்கு இணங்க குறித்த இறைச்சியின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதற்கு சீல் வைக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இறைச்சியின் மாதிரிகள் இன்று (8) அரசு ஆய்வாளருக்கு மேலதிக பரிசோதனைக்காக அனுப்பப்பட உள்ளன.
ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.













