பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.













