வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில், 20ஆம் கட்டை பகுதிக்கு அருகில் உள்ள தொலைபேசி கம்பம் ஒன்றின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் 4 தோட்டாக்களும் மற்றும் வெளிநாட்டுத் தயாரிப்பான ரிவோல்வர் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்று (08) அதிகாலை, வலான மத்திய ஊழல் ஒழிப்புத் தாக்குதல் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போதே குறித்த துப்பாக்கிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













