டித்வா சூறாவளியைத் தொடர்ந்து மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்காக 2 மில்லியன் டொலர் உடனடி அவசர நிதி உதவி மற்றும் இரண்டு C-130 விமானங்களை அனுப்பியதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அமெரிக்காவுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
இது குறித்து எக்ஸில் பதிவிட்ட ஜனாதிபதி,
இக்கட்டான நேரத்தில் மீண்டும் எங்களுடன் நின்றதற்காக அமெரிக்காவிற்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன் என்று கூறினார்.
அத்துடன், விரைவான C-130 விமான பயன்பாடுகளும் உடனடி 2 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவியும், நமது நீடித்த கூட்டாண்மையின் வலிமையைப் பிரதிபலிப்பதுடன், நமது மக்களிடையே நெருங்கிய உறவுகளை வெளிக்காட்டுவதாகவும் கூறினார்.
இதேவேளை, இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்காக இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் இலங்கை ஆயுதப்படைகளுடன் இணைந்து பணியாற்றுவதாக அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளையகம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.













