நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை விடைத்தாள்கள் சேதமடையவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், பொதுமக்கள் திணைக்களத்தின் என்ற துரித இலக்கத்தின் மூலமாகவோ அல்லது 0112 78 45 37, 0112 78 66 16, 0112 78 42 08 என்ற தொலைபேசி இலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், 0112 78 44 22 என்ற தொலைநகல் மூலமாகவோ அல்லது http://gcealexam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியூடாகவோ தெரிவிக்கலாம்.
இதேவேளை, உயர்தரத் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி 12 முதல் 20 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.















