விபத்துக்குள்ளான நாடாளுமனற்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வைத்திய அறிக்கை இதுவரை பொலிஸாருக்கு கிடைக்காத நிலையில் விபத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவின் வாகனப் பரிசோதனை அறிக்கை மட்டுமே பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அசோக ரன்வல செலுத்திய வாகனத்தின் பிரேக் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்றும், பிரேக் அமைப்பில் கோளாறு இருப்பதாகவும் வாகனப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

















