சிட்னியின் போண்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்ததாகக் கூறப்படும் சந்தேக நபரான நவீத் அக்ரம் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் பயங்கரவாதச் செயலைச் செய்ததாக 59 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு துப்பாக்கிதாரியான 50 வயதுடைய அவரது தந்தை சஜித் அக்ரம் பொலிஸாருடனான பரஸ்பரச் துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.
1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அவுஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச் சூடு இதுவாகும்.
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை 2026 ஏப்ரல் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.













