இல்லினாய்ஸுக்கு தேசிய காவல்படை வீரர்களை அனுப்ப அனுமதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையை செவ்வாயன்று (23) அமெரிக்க உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
மாநிலத்திற்கு இராணுவ ரிசர்வ் படையை அனுப்பும் தனது திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திய கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை இரத்து செய்யுமாறு ட்ரம்ப் கோரியிருந்தார்.
எனினும் டரம்பின் கோரிக்கையை நிராகரித்த அமெரிக்க உயர் நீதிமன்றம், ஜனநாயகக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களில் இராணுவத்தை நிலைநிறுத்த ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகளை எதிர்த்து தொடரப்பட்ட ஏனைய வழக்குகளை இந்த கோரிக்கை பாதிக்கலாம் என்றும் சுட்டிக்காட்டிது.
நீதிமன்றின் இந்த தீர்ப்புக்கு வெள்ளை மாளிகை உடனடி பதிலை வெளியிடவில்லை.
ஜனவரியில் மீண்டும் ஜனாதிபதியக பதவியேற்றதிலிருந்து அவசரகால மேல்முறையீடுகளில் மீண்டும் மீண்டும் வெற்றி பெற்ற ட்ரம்பிற்கு இந்தத் தீர்ப்பு ஒரு அரிய பின்னடைவினை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரம், அமெரிக்க ஜனாதிபதி அண்மைய மாதங்களில் உள்ளூர் மற்றும் மாநில அதிகாரிகளின் ஆட்சேபனைகளை மீறி நாடு முழுவதும் பல நகரங்களுக்கு ஏற்கனவே வீரர்களை அனுப்பியுள்ளார்.
ஜனநாயகக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களில் வன்முறையைத் தணிக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், தனது நாடுகடத்தல் முயற்சிகளை ஆதரிக்கவும் வீரர்களை பயன்படுத்துவது அவசியம் என்று ட்ரம்ப் வாதிடுகிறார்.
ஆனால், இல்லினாய்ஸ் அதிகாரிகள் மற்றும் தலைவர்களால் கொண்டுவரப்பட்ட சட்ட சவால்களுக்கு பதிலளிக்கும் விதமாக, சிகாகோ பகுதியில் நூற்றுக்கணக்கான தேசிய காவல்படை வீரர்களை நிறுத்துவதை கீழ் நீதிமன்றம் தடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

















